ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றார் நீதிமன்றத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்!

Saturday, January 14th, 2023

260 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மற்றும் நான்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் வரவேற்றுள்ளார்.

மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு ஹோட்டல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு குறைவான பாதுகாப்பே வழிவகுத்தது என தெரிவித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தாக்கல் செய்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இலங்கை வரலாற்றில் மிக மோசமான தாக்குதல்களை முன்னாள் ஜனாதிபதியும் அவரது அதிகாரிகளும் தடுக்கத் தவறிவிட்டனர் என நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், சிறிசேனவும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களும் தீர்ப்பு குறித்து பகிரங்கக் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இத்தீர்ப்பின் அடிப்படையில் இந்த வழக்கு தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்ப்பதாகவும் முழு உண்மை வெளிவரும்போது தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என தான் நம்புவதாகவும் கர்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

உள்ளூர் நிறுவனங்களினால் அதிகரிக்கப்பட்ட மதுபானங்களின் திருத்தப்பட்ட விலை அறிவித்தலை உடனடியாக விற்பனை...
காலநிலை மாற்றம் தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒரு வாரத்தில் அமைச்சரவைக்கு - ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசக...
பத்து வருட புதிய GSP + தொடர்பில் அலங்கைக்க விளக்கமளிக்கிறது ஐரோப்பிய ஒன்றியம் - வெளிவிவகார அமைச்சில்...