சீரமைப்பு பணி: இரு மணி நேரம் தடைப்படும் 119 அழைப்பு !
Friday, January 6th, 2017
எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதி பொலிஸ் அவசர அழைப்பு நிலையத்தில் இரு மணி நேர சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதால் பொலிஸ் அவசர அழைப்பு நிலைய வலையமைப்பின் நடவடிக்கைகள் இருமணி நேரம் தடைப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பொலிஸ் அவசர அழைப்பு நிலைய தொலைபேசி வலையமைப்பில் அடிக்கடி ஏற்படும் கோளாறை சீர் செய்யும் நோக்கிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில் எதிர்வரும் 09 ஆம் திகதி மு.ப. 04.00 மணி முதல் மு.ப. 06.00 மணி வரையான காலப் பகுதியில் பொலிஸ் அவசர அழைப்பு நிலைய வலையமைப்பின் புனரமைப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
புதிய அரசியல் அமைப்பு திருத்த உப குழுவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 06 பேர் விலகல்!
சீன தூதுவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் விசேட சந்திப்பு!
புத்தாண்டை முன்னிட்டு நாளைமுதல் விசேட பேருந்து சேவை - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!
|
|
|


