விவாதத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட முடியாது: சபாநாயகர்
Saturday, May 6th, 2017
சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவ கல்லூரி குறித்த விவாதத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக இன்று நடைபெறவுள்ள ஒருநாள் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்பில் கூட்டுஎதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற விவாதம் ஒன்றை கோரியிருந்தனர். எனினும், காலம் கடந்து கோரிக்கை விடுத்தமையினால் அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட முடியாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
அவை ஒத்தி வைப்பு விவாதமொன்றை கூட்டு எதிர்க்கட்சியினர் கோரியிருந்தனர்.எனினும் அவை ஒத்தி வைப்பு விவாதம் ஒன்றை கோருவதனால், விவாதம் நடத்தப்படுவதற்கு ஒரு தினம் பகல் 12 மணிக்கு முன்னதாக கோரப்பட வேண்டுமென அறிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் தினேஸ் குணவர்தன காலம் கடந்தே இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


