விமான சேவைகள் முற்றாக தடைப்படும் அபாயம்!
Wednesday, July 26th, 2017
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து கனியவள ஊழியர்கள் தொடர்ந்து பணி புறக்கணிப்பால் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கான விமான சேவைகள் பாதிப்படையலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தினங்களாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையால், பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதால் அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்துள்ளனர்.தமது கோரிக்கைகளுக்கு ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வு கடிதம் கிடைக்கும் வரையில் பணி புறக்கணிப்பு கைவிடப்படாதென கனியவள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் விமானங்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான நிலை நீடிக்கும் பட்சத்தில் விமான சேவைகள் முற்றாக தடைப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது
Related posts:
கிழக்கு மாகாண சபையின் அரச நிறுவனங்களில் வீட்டுத்தோட்டம் அமைக்குமாறு மாகாண ஆளுநர் பணிப்பு!
காவல்துறை மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கக்கூடிய ஒருவரே புதிய பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்ப...
காஸாவில் ஏற்பட்டுள்ள நிலைமை இலங்கைக்கும் பொருளாதார ரீதியில் பாதிப்புகளை ஏற்படுத்தும் - கவனம் செலுத்த...
|
|
|


