விஜயகலாவுக்கு புனர்வாழ்வு வழங்க வேண்டும் என சொல்கிறார் முன்னாள் இராணுவ தளபதி!

Monday, August 14th, 2017

முன்னாள் புலிகளுக்கு வழங்கப்பட்டது போல் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கும் புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள், முதியவர்கள் உள்ளிட்டோரை கொலை செய்து போரில் வெற்றி பெற்றதாக ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியிருந்ததுடன் கடந்த அரசாங்கம் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கவில்லை எனவும் ராஜாங்க அமைச்சர் நேற்று குற்றம் சுமத்தியிருந்தார் தொடர்பில் பதிலளிக்கும் வகையில் முன்னாள் இராணுவ தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா இதற்கு முன்னரும் பல பொய்களையும் தேவையற்ற கட்டுக்கதைகளையும் பரப்பி வந்துள்ளார்.  எனவே இராஜாங்க அமைச்சர் வியஜகலாவுக்கும் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு போல்  புனர்வாழ்வு வழங்கப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமைச்சர் விஜயகலா மாணவி வித்தியாவின் கொலைச் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சித்தார் என செய்திகள் வெளியாகியிருந்ததுடன் இது தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையினரால் அவர் பல மணிநேரம் விசாரைணக்கும் உட்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts:

PCR பரிசோதனை அறிக்கையில் தவறு - விசாரணை நடத்துமாறு அரச மருத்துவ ஆய்வுக்கூட சம்மேளனம் கோரிக்கை!
ஐந்து ஆண்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓய்வூதியத்தொகை நிறுத்தம் - ஓய்வூதிய திணைக்களம் தகவல...
நாடு முழுவதும் ஆயுதப் படையினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு - சபாநாயகர் மஹிந்த...