விக்னேஸ்வரனை பதவியிலிருந்து நீக்குவது காலத்தின் தேவையாம்  – சுமந்திரன்!

Saturday, July 1st, 2017

தற்போதைய நிலைமையின் படி வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை  முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது நாட்டுக்கும் தமிழர்களுக்கும்  இனங்களிடையேயான நல்லிணக்கத்துக்கும் நல்லது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என செய்திகள் வெனியாகியுள்ளன. . இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

நான் தொடர்ச்சியாக அந்த நிலைப்பாட்டில் உள்ளேன். இது எனது தனிப்பட்ட நிலைப்பாடு. கட்சி இதை இன்னும் ஏற்கவில்லை.இவரை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருந்தாலும் இவரை நீக்குவதற்காக நான் சதித் திட்டம் தீட்டி செயற்படவில்லை.அவர் நாட்டுக்கு எதிராகவும் இன ஒற்றுமைக்கு எதிராகவும் செயற்படுகின்றார். அவரை நீக்க வேண்டும் என்பது காலத்தின் தேவையாகும். ஆனால், அது சதி அல்ல என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


சமூக ஊடகங்களுக்கான வலவான சட்டக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரி...
இந்திய இராணுவம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக வௌியாகும் செய்தியில் உண்மை இல்லை: பாதுகாப்பு செயலாளர்...
யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு 175 க்கும் மேற்பட்டோர் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்ப்பு - வைத்தியர் அதி...