வாக்காளர் இடாப்பில் பதிவு செய்ய  செப்டெம்பர் வரை அவகாசம்!

Wednesday, August 23rd, 2017

2017 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் தமது பெயரைப் பதிவு செய்து கொள்ள முடியாமல் போனவர்களுக்கு செப்டெம்பர் ஆறாம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் வரைபு அட்டவணை தேர்தல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.கிராம சேவையாளர் அலுவலகம், பிரதேச செயலகங்கள், மாவட்ட செயலகங்கள் மற்றும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் என்பவற்றில் குறித்த வரைபு அட்டவணை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்ட போது தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ள முடியாது ​போன வாக்காளர்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர் ஆறாம் திகதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள முடியும். மேலும், அடுத்த ஆண்டு முக்கியமான பல தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் 2107 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

Related posts:

கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு - இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில...
பேச்சுவார்த்தை நடத்த சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை புலம்பெயர் சமூகத்தினர் நடத்திய விதம் கவலைய...
மின்சாரம், சுகாதாரம் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு; இன்றுமுதல் நாடுமுழுவதும் பொது அமைதியை பேண ஆயுதம்...