வளச்சுரண்டல்களை எதிர்த்து வடமராட்சியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!
Wednesday, May 30th, 2018
வடமராட்சி கிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளச் சுரண்டல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் எதிர்ப்பு கவனயீர்ப்பு போராட்டம் நாளை மறுதினம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வடமராட்சி கிழக்கு இளைஞர்களால் மேற்கொள்ளப்படவுள்ள இவ் எதிர்ப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை மருதங்கேணி பிரதேச செயலக முன்றலில் முற்பகல் 10 மணியளவில் இடம்பெறவுள்ளது.
வடமராட்சி கிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளச் சுரண்டல்களான கடலட்டை பிடித்தல், மணல் அகழ்வு என்பவற்றை நிறுத்துமாறு கோரியும் கஞ்சா, கசிப்பு, வாள்வெட்டு கலாசாரத்தை ஒழிக்குமாறு கோரியுமே இப் போராட்டம் இடம்பெறவுள்ளது. இப் போராட்டத்திற்கு வடமராட்சி கிழக்கு பகுதியிலுள்ள இளைஞர்கள், பொதுமக்கள், பொது அமைப்புகள் அனைவரையும் ஆதரவு தரும்படி ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.
Related posts:
தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்களை கைவிட முடியாது - ஜனாதிபதி!
ஹம்பாந்தோட்டை துறைமுகப்பணிகள் ஆரம்பம்!
தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட எறிகணை தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் காயம்!
|
|
|


