வரி நிவாரணத்தை வழங்குவதற்காக அமைச்சர்களுக்கு இருந்த அதிகாரம் இரத்து!

Tuesday, September 5th, 2017

அமைச்சர்கள் தமது விருப்பத்திற்கு அமைவாக வரி நிவாரணத்தை வழங்குவதற்காக இருந்த அதிகாரம் புதிய வருமான வரிச் சட்டத்தின் மூலம் இரத்தாகின்றது என  நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

உள்ளுர் முதலீட்டாளார்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரி நிவாரணம் வழங்கக்கூடிய பரவலான நடைமுறை ஒன்று புதிய வருமான வரி சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வரி நிவாரணம் மற்றும் வரியில் இருந்து விடுபடுவதற்காக அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு கடந்த அரசாங்க காலப்பகுதியில் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த நிலை இந்த சட்டத்தின் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இதுவரை காலமும் பல்வேறான வரி நிவாரணம் உள்ளிட்ட சலுகைகளை வழங்குவதற்கு நிதி அமைச்சருக்கு இருந்து வந்த அதிகாரம் கூட இந்த சட்டத்தின் மூலம் இரத்தாகிறது. வருடாந்தம் ஆறு இலட்சம் ரூபா வருமானத்தை பெறும் குடும்ப உறுப்பினர் ஒருவர் சிரேஷ்ட பிரஜை உள்ளிட்டோர் உட்படுவதாக சிலர் பிரச்சாரம் செய்கின்றனர். மத வழிபாட்டுத்தலங்களும் இச் சட்டத்திற்குள் உட்படும் என்றும் இவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதில் எதுவித உண்மையும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதற்கு முரண்பாடான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

முதலீடுகளை மேற்கொள்ளும் ஒருவருக்கு கிடைக்கப் பெறும் வரி நிவாரணம் எவ்வளவு என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கு இந்த சட்டத்தின் மூலம் வசதி உண்டு. இதன் மூலம் முறைகேடாக வரி நிவாரணத்தை வழங்குவதற்கு அமைச்சர்களுக்கும்இ திணைக்களத்திற்கும்இ நிறுவன முக்கியஸ்தர்களுக்கும் வழங்கப்பட்டிருந்த அதிகாரம் சட்டம் நிறைவேற்றப்பட்டதுடன் ரத்துச் செய்யப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.  இதனை பொறுத்துக் கொள்ள முடியாத மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் இந்த சட்டம் குறித்து பல்வேறான உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களை முன்னெடுத்து பொதுமக்களை ஏமாற்றப் பார்க்கின்றனர். அது மாத்திரமன்றி மக்களை தவறான முறையில் வழிநடத்த முயற்சிப்பதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.

Related posts: