வலி தெற்கு பிரதேச சபையின் வட்டாரங்களில் சேவை செய்ய விகிதாசார உறுப்பினர்களுக்கு அதிகாரம் இல்லை – தவிசாளரது பதிலால் சபையில் பெரும் களோபரம்!

Thursday, October 22nd, 2020

வலிகாமம் தெற்கு பிரதேச உள்ளூராட்சி மன்றத்தின் அபிவிருத்தி பணிகளில் விகிதாசார உறுப்பினர்களுக்கு எதுவித அதிகாரமும் இல்லை என்றும் அவர்கள் சபையில் மட்டுமே செயற்படுவதற்குரிய அதிகாரலம் கொண்டவர்கள் என்றும் குறித்த சபையின் தவிசாளரதும் ஒரு சிலரது சுயநல தன்னிச்சையான போக்கால் தமது சிறப்புரிமை மீறப்படுவதுடன் தமது மக்களுக்கான பணியும் திட்டமிட்டு முடக்கப்பட்டு வருவதாகவும் குறித்த சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஜெயராஜா தனுஷா அவர்களால் குற்றம் சாட்டப்பட்டதுடன் அனைத்து உறுப்பினர்களுக்கம் சமமாக மதிக்கப்பட்டு ஒதுக்கிடுகள் பகிரப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்ததை அடுத்து  குறித்த சபையின் அமர்வின்போது பெரும் அமளிதுமளி ஏற்பட்டது

இன்றையதினம் குறித்த சபையின் மாதாந்த அமர்வு சபையின் தவிசாளர்  தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதேசத்தின் அபிவிருத்திகளில் விகிதாசார உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி அதற்கான தீர்வை தருமாறும் உறுப்பினர் தனுஷா கோரியிருந்ததார்.

அத்துடன் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தின் தேர்தல் முறைமையில் ஒவ்வொரு பிரதேசத்தினதும் அபிவிருத்தியை இலகுபடுத்துவவதற்காக அப்பிரதேச சபைகளின் உள்ளூராட்சி மன்ற ஆளுகைக்கட்பட்ட பகுதியிலுள்ள வட்டாரங்களின் தொகைக்கு மேலதிகமாக 40 வீதத்தை விகிதாசார முறைமையூடாக உள்வாங்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் ஒரு சபையில் 12 வட்டாரங்கள் காணப்பட்டால் அச்சபையின் மொத்த உறுப்பினர்கள் 20 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இந்த முறைமையில் உள்வாங்கப்படும் உறுப்பினர்களின் அதிகாரங்களிலோ அன்றி அபிவிருத்தியில் முன்னெடுக்கப்படும் ஒதுக்கிடுகளிலோ எதுவிதமான பாகுபாடுகளோ அன்றி வேற்றுமைகளோ இருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமான அதிகாரங்கள் இருக்கின்ற போதிலும் விகிதாசார முறைமையூடாக தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மேலதிகமாக அப்பிரதேசத்தின அனைத்து பகுதிகளிலும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அதிகாரமும் இருக்கின்றது. இந்நிலையில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையை தவிர யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து சபைகளிலும் இவ்வாறான வேற்றுமைகளோ அன்றி பாகுபாடுகளோ இருப்பதாக தெரியவில்லை.

ஆனால் எமது வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் மட்டும் இவ்வாறான நேரடி மற்றும் விகிதாசார முறைமை என்ற பாகுபாடு காட்டப்பட்டு அதுவும் ஒரு சில உறுப்பினர்களின் சுயநலன்களுக்காக தவிசாளர் தலையாட்டும் பொம்மையாக இருந்து செயற்பட்டு வருவது வேட்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

மக்களின் நலன்களையும் பிரதேசத்தின் அபிவிருத்தியையும்; பாகுபாடுகள் மற்றும்   வேற்’றுமைகள் இன்றி முன்னெடுப்பதற்காகவே இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் உறுப்பினர்களின் தொகை அதிகரிக்கப்பட்டது.

ஆனால் எமது பிரதேச சபையில் அவிருத்தி செயற்பாடுகள் என்று வரும்போது விகிதாசார உறுப்பினர்கள் புறந்தள்ளப்படுகின்ற நிலைமையே தொடர்ந்தும் காணப்படுகின்றது. இது தொடர்பில் நான் உள்ளூராட்சி உதவி ஆணையாளரிடமும் முறையிட்டு அதற்கான தீர்வை தருமாறு கோரியிருந்தேன். அதற்கு அவர்கள் சபையின் உறுப்பினர்கள் அனைவரும் சமமான அதிகாரங்களை கொண்டவர்கள் அதில் வேறுபாடுகள் இல்லை என தெளிவாக தெரிவித்திருந்தார்.

இதை தவிசாளருக்கு தெரியப்படுத்தியிருந்தபோதுதும் தவிசாளர் ஒரு சில உறுப்பினர்களின் சுயநலன் மற்றும் அவர்களது தனிப்பட்ட அரசியல் இலாபத்திற்காக எமக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமையை  இல்லாது செய்கின்றனர். எனவே இதற்கு நியாயமான தீர்வு வேண்டும் என வலியுறுத்தியிருந்தும் அதற்கான முழுமையான தீர்வை கொடுக்காது தவிசாளர் இழுத்தடிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: