வரி செலுத்தும் மக்களுக்கு தகவல் அறிய உரிமையுண்டு – சுதர்ஷன குணவர்த்தன !

Friday, July 6th, 2018

அரசுக்கு வரி செலுத்தும் பொதுமக்களுக்கு அரச பணிகள் தொடர்பில் தெரிந்துகொள்வதற்கு உரிமை உண்டு. அரச பணிகள் தொடர்பான தகவல்களை உரிய முறையில் வழங்குவதன் மூலம் இந்த உரிமை உறுதிசெய்வதை அரச ஊடக நிறுவனங்களுக்கு உட்பட்டவர்களின் பொறுப்பாகும்.

இவ்வாறு அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்த்தன தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற டிஜிற்றல் படப்பிடிப்பாளர்களுக்கான செயலமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது:

இன்று பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் வானொலி போன்ற ஊடகங்கள் டிஜிற்றல் மயப்படுத்தப்பட்டுள்ளன.

டிஜிற்றல் மயத்தை நோக்கிய பயணயுகத்திலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பொதுமக்களுக்கு வாசிப்பதற்கு நேரமில்லை. பெரும்பாலோனோர் தகவல்களைக் கையடக்கத் தொலைபேசி ஊடாகவோ அல்லது தரப்பின் ஊடாகவோ பார்த்து அறிந்து கொள்கின்றனர். இதன் காரணமாக நீண்ட கட்டுரைகளை வெளியிடுவதிலும் பார்க்கப் புகைப்படங்களின் மூலம் தகவல்களைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க முடியும். தகவல்களை வழங்குவதில் புகைப்பட ஊடகவியலாளர்களைப் பயன்படுத்த முடியும். ஆயிரம் சொற்களில் ஒரு செய்தி சொல்லப்படுவதை ஒரு ஒளிப்படத்தினூடாகச் சொல்ல முடியும் என்றார்.

அரச தலைவர் ஊடகப்பிரிவு மற்றும் அரச தகவல் திணைக்களம் இணைந்து இந்தச் செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது. அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் ஒளிப்பட ஊடகவியலாளர்களாகப் பணியாற்றுபவர்களுக்காக இச் செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.

Related posts: