வரிநிலுவையை செலுத்த 3 மாத காலம் அவகாசம்!

Thursday, August 17th, 2017

சொகுசு, அரை சொகுசு மற்றும் இரட்டை அரை சொகுசு வாகனங்களுக்காக செலுத்தப்படவேண்டிய வரி நிலுவையை செலுத்துவதற்கு மூன்று மாதம் சலுகைகாலம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

சொகுசு, அரை சொகுசு மற்றும் இரட்டை அரை சொகுசு வாகனங்கள் முதலில் பதிவு செய்த தினத்தில் இருந்து 07 வருடங்கள் வரை தொடர்ந்து வரிப்பணம் செலுத்த வேண்டும்.

அதன் முதலாவது வரிப்பண தவணையினை குறித்த வாகனம் பதிவு செய்யப்படும் போது மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் அறிவிடப்படுவதுடன், மிகுதி தொகையினை அத்திணைக்களத்திற்கோ அல்லது காப்புறுதி நிறுவனத்திற்கோ செலுத்த முடியும். அவ்வாறு வரிப்பணத்தை செலுத்தாது விடுகின்ற சந்தர்ப்பங்களில் மிகுதி வரிப்பணத்துக்காக 50% தண்டப்பணம் அறிவிடப்படும்.

இதுவரை மொத்த மிகுதி வரிப்பணத் தொகையாக 350 மில்லியன் ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது. அவ்வாறு வரி பணத்தை செலுத்துவதற்கு காலதாமதம் ஏற்படுவதற்கு வாகன உரிமையாளர்களின் நிர்வாகத்துக்கு புறம்பான காரணங்களும் ஏதுவாய் அமைகின்றன .

இதனை கவனத்திற் கொண்டு, சொகுசு, அரை சொகுசு மற்றும் இரட்டை அரை சொகுசு வாகனங்களுக்காக செலுத்தப்பட வேண்டிய மிகுதி வரிப்பணத்தினை செலுத்துவதற்காக 2017ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 01ம் திகதி முதல் 2017 நவம்பர் மாதம் 30 வரையான 03 மாத கால அவகாசம் வழங்குவதற்கும், அச்சலுகை காலத்தினுள் மிகுதி வரிப்பணத்தை செலுத்துகின்ற வாகன உரிமையாளர்களுக்கு உரிய தண்டப்பணத்தில் 5% இனை மாத்திரம் அறவிடுவதற்கும போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts: