பாடப் புத்தகத்தில் தவறு: குழப்பத்தில் மாணவர்கள்!

அடுத்தாண்டுக்கான கல்வி நடவடிக்கைக்காக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடப்புத்தகத்தில் குழப்பங்கள் உள்ளதாகசுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரச பொது கல்வி வெளியீட்டு திணைக்களத்தால் 2018ஆம் ஆண்டுக்காக அச்சிடப்பட்ட புத்தகத்தில் குழப்ப நிலை உள்ளதாகமாணவர்களின் பெற்றோர் சுட்டிக்காட்டியுள்ளனர். கெக்கிராவை கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் புத்தகங்கள் சிலவற்றில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
9 ஆம் தரத்துக்கான கணிதம் பகுதி II புத்தகத்தின் முதலாவது பாடமாக இலங்கையின் கரையோரப் பகுதிகள் டச்சுவின் கீழ் கைப்பற்றல் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அப் புத்தகத்தில் 7வது பக்கத்தில் இருந்து மீண்டும் கணித பாடத்திற்கான பகுதிகள் அச்சிடப்பட்டுள்ளதாக பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். இதனால் விடுமுறை காலத்தில் இந்த புத்தகத்தை கற்பதில் குழப்ப நிலைஏற்பட்டுள்ளதாக பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|