வரட்சியான காலநிலையால் 3 இலட்சத்திற்கதிகமான மக்கள் பாதிப்பு!
Sunday, February 25th, 2018
நிலவும் வரட்சி காலநிலையால் நாட்டின் 5 மாவட்டங்களில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், மன்னார் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதனால் 91 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த இரண்டு லட்சத்து 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டமே வரட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அங்கு 11 பிரதேச செயலகங்களை சேர்ந்த 2 லட்சம் பேர் உட்பட விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய மலை நாட்டின் நீர் வள பகுதிகளில் பல மாதங்களாக நிலவும் வரட்சி காலநிலையால் காஸல்ரீ மற்றும் மவுசாகெல நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிழக்காசிய நாடுகளின் உச்சி மாநாடு 9 ஆம் திகதி ஆரம்பம்!
80% வாக்குப்பதிவு இடம்பெறும் - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை!
நாட்டின் நன்மைக்காக பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளது - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவ...
|
|
|


