வடக்கு மாகாணப் பாடசாலைகளில் புதிய வகுப்புப் பிரிவுகளுக்கு அனுமதி!

Friday, April 27th, 2018

வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைக் கல்விச் சமூகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக புதிய வகுப்புப் பிரிவுகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியும் ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது என்று மாகாணக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் கல்விச் சமூகத்தினர் அமைச்சுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். அதனைப் பரிசீலித்து ஆளணி, பௌதீக வளம் போன்றன வழங்கப்பட்டு வருகின்றன.

பாடசாலைகளின் தேவைக்கு ஏற்ப பாடப் பிரிவுகள் ஆரம்பிப்பதற்கான அனுமதிகள் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. வவுனியா குஞ்சு குளம் அ.த.க பாடசாலையில் தரம் பத்தினை ஆரம்பித்தல், யாழ்ப்பாணம் சென் ஜேம்ஸ் மகளீர் பாடசாலைக்கு உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவு ஆரம்பிப்பதற்கான அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை மேற்கு அரசினர் முஸ்லீம் ஆரம்ப பாடசாலையை மீள ஆரம்பித்தல், வெலி ஓயா மீளக் குடியமர்ந்த பிரதேசத்தில் ஆரம்பப் பாடசாலை ஒன்றை அமைத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: