யாழ்ப்பாணத்தில் கொரொனா தீவிரம் – மூடிய அறைக்குள் மருத்துவர் ஆலோசனை!

Wednesday, March 25th, 2020

யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுவதைக் கட்டுப்படுத்த சிறப்பு தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், யாழ். மாவட்டத்திலுள்ள சிரேஸ்ட மருத்துவர்கள், கொரோனா எதிர்ப்பு செயலணியின் உறுப்பினர்கள், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆளுநரின் செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சமுதாய மருத்துவ நிபுணர், இராணுவம், யாழ். மாவட்ட செயலக அதிகாரிகள், தலமையில் இந்த உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த தீவிரமாக பேசப்பட்டிருக்கின்றது. மேலும் வடக்கில் முற்றாக இல்லதொழித்தலுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படடடதாக கூறப்படுகின்றது.

மேலும் ஆராயப்பட்டிருக்கும் விடயம் தொடர்பாக அனைவரும் இணைந்து அதி முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட விசேட உயர்மட்ட கலந்துரையாடலை அடுத்தே அன்றையதினம் யாழ்ப்பாணத்தில் ஒருவர் குறித்த நோய்க்கு உள்ளாகியுள்ளார் என வைத்தியசாலை தரப்பினரால் அறிவிக்கப்படிருந்தது. இதையடுத்து அமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலைக்கும் சென்று நிலைமைகளை ஆராய்ந்தறிந்துகொண்டார்.

அத்துடன் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் வெளிச்செல்வதை கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பல முயற்சிகளையும்  அமைச்சர் மேற்கொண்டிருந்ததுடன் ஊரடங்குச் சட்டத்தால் பாதிக்கப்படும் மக்களது வாழ்வாதாரத்துக்கான உதவிகளையும் பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார்.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் குறித்த நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தும் அதை உரிய வகையில் வெளிப்படுத்தாது சில அழுத்தங்கள் மற்றும் மறைப்புக்கள் இடம்பெற்றதாக வடக்கு மாகாண ஆளுநர் நேற்றையதினம் ஊடக சந்திப்பொன்றில் குற்டறம் சாட்டியிருந்ததுடன் குறித்த முறைகேடு தெர்டர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு செல்லவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே இன்றையதினம் மூடிய அறைக்குள் இன்று துறைசார் தரப்பினர் கலந்தாலேசித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: