வடக்கு இளைஞர்கள் வன்முறைகளில் ஈடுப்படுவதன் அர்த்தம் புலிகள் என்று ஆகாது!

Sunday, August 6th, 2017

வடக்கில் இளைஞர்கள் வன்முறைகளில் ஈடுப்படுவதன் பொருள் விடுதலைப்புலிகள் என்று ஆகாது என இராணுவத்தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்வடக்கில் காவற்துறையினரின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது

இதற்கு அனுமதி வழங்கும் வரை காத்திருக்காமல் அதற்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை, யுத்தக்காலத்திலோ அல்லது அதற்கு பிந்திய காலப்பகுதியிலோ இராணுவ சீருடையை பயன்படுத்தி யாரேனும் தவறான செயற்பாடுகளில் ஈடுப்பட்டிருந்தால் அவர் ஒரு இராணுவ வீரராக கருதப்படமாட்டார்.

அத்தகைய இராணுவ வீரர்களே சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றனர்.அவ்வாறு இன்றி யுத்தத்தை நேர்மையாக முன்னெடுத்த எந்த இராணுவ வீரரும் கைது செய்யப்படவில்லை.அதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்படமாட்டாது, என இராணுவத்தளபதி மகேஸ் சேனாநாயக்க குறிப்பிட்டார் அத்துடன் இராணுவ வீரருக்கும் கொலை குற்றவாளிகளுக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளதாக தெரிவத்த அவர், இராணுவ வீரர் ஒருவர் கொலை குற்றவாளியாக மாறியிருந்தால் அவர் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

Related posts: