ரோஹிங்கியா அகதிகளுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை- பொலிஸ் மா அதிபர்!
Sunday, October 1st, 2017
ரோஹிங்கியா அகதிகளுக்கு எதிராக நடந்துக்கொண்ட 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அகதிகளுக்கு எதிராக நடந்துக்கொண்ட இந்த சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.சம்பவம் தொடர்பான காணொளிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளல் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள். தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய மனிதாபிமான இல்லாமல் நடந்து கொண்ட சம்பவம் தொடர்பில் அதிருப்தியை வெளியிடுவதாகவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்,
Related posts:
பெரும்போக நெற் செய்கைக்கு 3 மாதங்களில் 3 ஆயிரத்து 559 பவுசர் எரிபொருள் பகிர்ந்தளிப்பு - விவசாய அமைச்...
அருகில் இருப்பவர்களை அதிகம் நம்பக்கூடாது. – முன்னாள் ஜனாதிபதி கோட்டா வேதனை!
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் கம்பஹாவில் விபத்து!
|
|
|


