ரயில்வேதுறைக்கு இந்தோனேசியா ஒத்துழைப்பு!
Saturday, January 27th, 2018
இலங்கையின் ரயில்வேதுறை அபிவிருத்திக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க இந்தோனேஷியா முன்வந்துள்ளது.
இதற்கான தளஆய்வு அறிக்கையை தயாரிப்பதற்கு இந்தோனேசிய தொழிநுட்ப குழுவினரை இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்தோனேஷியா ஜனாதிபதி ஜோகோ விடோடோஉறுதி அளித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தோனேஷியா ஜனாதிபதிக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின் போதே இந்தோனேஷியாஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
7ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இந்தோனேஷியாவில் இருந்த ஸ்ரீவிஜய அரச பரம்பரையினர் இலங்கையிலுள்ள அபயகிரி விகாரையுடன் நெருக்கமான தொடர்பை கொண்டுஇருந்தனர் என்று பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Related posts:
மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் - சிஐடி விசாரணை!
பொய்யான தகவல்களை வழங்கினால் சட்ட நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க எச்சரிக்கை!
|
|
|


