யாழ்ப்பாண நகரில் களமிறக்கப்பட்டது இராணுவத்தின் மோட்டார்சைக்கிள் கொமாண்டோ அணி

யாழ்ப்பாண நகரப் பகுதியில் இன்றைய தினம் இலங்கை இராணுவத்தின் மோட்டார்சைக்கிள் கொமாண்டோ அணி களமிறக்கப்பட்டு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட சில பகுதிகளில் ஊரடங்கு சட்டமானது கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே யுத்த காலத்தில் களமிறங்கிய மோட்டார்சைக்கிள் கொமாண்டோ அணியினர் மீண்டும் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக யாழ்ப்பாண நகரத்தில் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பாடசாலைகளில் இடம்பெறும் காலைப் பிரார்த்தனைகளைப் பயனுள்ளதாக மாற்ற நடவடிக்கை!
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் மீண்டும் இன்றையதினம் ஆரம்பம்!
புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விவகாரம் குறித்த அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் கையளிப்பு!
|
|