யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தில் தெருக்கள் !

ஒரு துறைமுகம் அமைத்தல் உட்பட இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒரு கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த தகவலை தெரவித்த இந்திய வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் கோபால் பேக்லே யாழ்ப்பாண பிராந்தியத்தில் சர்வதேச தரத்திலான பாரிய வீதிகளை அமைக்கும் பணிகளிலும் இலங்கைகு உதவ இந்தியா இணங்கி இப்ருபதாகவும் தெரவித்தார் .
இந்திய விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய யூனியன் வீதி மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிதீன் கட்காரிக்கும் இடையே புது டில்லியில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் போதே வீதி அமைக்கும் பணிகளுக்கான இணக்கம் காணப்ப்படதாகவும் கோபால் பேக்லே தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தைகளின் போது இலங்கை பிரதம மந்திரி மூன்று பிரதான வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார். இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் – மன்னார் மன்னார் – வவுனியா மற்றும் தம்புள்ள- திருகோணமலை வீதிகளே இந்திய உதவியுடன் அபிவிருத்தி செய்ய இணக்கம் காணப்படுள்ளது. யாழ்ப்பாணத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு இந்த வீதிகள் முக்கியமானவை என இந்த பேச்சுவார்த்தையின் போது ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு தனது அமைச்சு பூரண ஒத்துளைப்பையும் வேண்டிய உதவிகளையும் வழங்கும் என அமைச்சர் நிதீன் கட்காரி பிரதமரிடம் உறுதி அளித்ததாகவும் புது டெல்லி செய்திகள் தேரிவிக்கின்றன.
Related posts:
|
|