முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு விஷேட பயிற்சி!
Wednesday, March 14th, 2018
சுற்றுலாப் போக்குவரத்து பற்றிய பயிற்சியைப் பத்தாயிரம் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பெற்றுக் கொடுக்க வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நிதி அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அனைத்து முச்சக்கரவண்டி சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பயிற்சிக்கு சாரதிகள் தெரிவு செய்யப்படுவர்.
இந்தப் பயிற்சிகள் மூன்று கட்டங்களாக வழங்கப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
Related posts:
மருந்து விலை குறைப்பால் பிரதிபலனாக 09 பில்லியன்!
மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் விரைவில் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தெரிவிப்பு!
பண்டிகையை முன்னிட்டு விசேட பொது போக்குவரத்து திட்டம் - துறைசார் தரப்பினருக்கு போக்குவரத்து அமைச்சு ...
|
|
|


