மான்செஸ்டர் பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறது இலங்கை!
Tuesday, May 23rd, 2017
இங்கிலாந்தின் மான்செஸ்டரில் (Manchester ) நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 19 பேர் உயிரிழந்ததுடன் 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த கொடூரமான சம்பவத்தை கண்டித்துள்ள இலங்கை ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக தெரிவித்தள்ளது. அத்துடன் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக குணமடையவேண்டும் என்று பிரார்த்திப்பதாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் மஹிசினி கொலன்ன தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டர் நகரில் அமெரிக்க பாடகர் அரியானா கிராண்டேவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்போது நேற்று நள்ளிரவு இரவு 10.30 (லண்டன் நேரம் ) மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது.
இதனையடுத்து, இசை நிகழ்ச்சியை பார்வையிட்ட மக்கள் சிதறி ஓடினர். இக்குண்டுவெடிப்பில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.இக்குண்டு வெடிப்பு நடைபெற்ற பகுதிக்கு அருகில் உள்ள விக்டோரியா ரயில் நிலையம் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போது மூடப்பட்டுள்ளது. மான்செஸ்டர் நகரில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Related posts:
|
|
|


