மாணவி வித்தியா கொலை – பதவி விலகுமாறு விஜயகலாவிடம் கோரிக்கை!

Sunday, September 3rd, 2017

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விஜயகலா பதவி விலகி, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாமல் தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சிறுவர் விவகார அமைச்சரே இது போன்ற கீழ்த்தரமான விடயங்களில் ஈடுபடுவது வருந்தத்தக்கது.

உடனடியாக பதவி விலகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். இந்நிலையில் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரை விஜயகலா மகேஸ்வரன் காப்பாற்றியதாக ஒப்புக் கொண்டுள்ளார் என அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வித்தியா கொலை வழக்கில் பிரதான சந்தேகநபராக சுவிஸ் குமார் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கொலை நடந்த சம்பவ தினமன்று சுவிஸ் குமார் மக்களால் பிடிக்கப்பட்டு வேலணை ஆலடி சந்திக்கருகில் மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு சென்ற அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சுவிஸ்குமாரை காப்பாற்றியதாக நீதிமன்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான காணொளியும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அத்துடன் விஜயகலா மீதான குற்றச்சாட்டை பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் நீதிமன்றில் ஏற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/RajapaksaNamal

Related posts: