மாகாண எல்லை நிர்ணயம் 9 ஆம் திகதி முதல் ஆரம்பம்

Wednesday, November 8th, 2017

புதிய தேர்தல் முறையில் மாகாண சபைகளுக்கான தேர்தலும் நடைபெறவுள்ளதால், மாகாண சபை எல்லை நிர்ணயத்தை உருவாக்க அரச தலைவரால் நியமிக்கப்பட்ட குழு எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் தனது பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.

மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டம் கடந்த செப்ரம்பர் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

சட்டவரைபில் மாகாண சபைகளின் எல்லை நிர்ணயம் நான்கு மாதங்களிற்குள் மீளுருவாக்கம் செய்யப்பட்டு கால எல்லை முடிவடைந்துள்ள மாகாணங்களுக்கான தேர்தல் நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 4 ஆம் திகதி 5 பேர் அடங்கிய மாகாண சபை எல்லை நிர்ணயக் குழுவை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார்.

தற்போது மாகாண எல்லை நிர்ணயம் குறித்து மக்களிடம் கருத்துக்களைக் கோரிவரும் மேற்படிக் குழு நாளை மறுதினம் 9 ஆம் திகதி அநுராதபுரத்தில் சிறப்புக் கலந்துரையாடலுடன் தனது பணியை ஆரம்பிக்கவுள்ளது.

கூகுல் மெப் மற்றும் சிறப்பு தொழிநுட்பங்களை உள்வாங்கி மாகாண சபை எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படவுள்ளது என்று முன்னதாக அரசு அறிவித்துள்ளது.

Related posts:


நிபுணர்கள் குழுவின் தீர்மானத்தை சகலரும் ஏற்க வேண்டும் - கொரோனாவால் மரணமாகும் நபர்கள் விவகாரம் தொடர்ப...
அவசியமாயின் இன்னும் 16 நாட்களுக்கு பின்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தமுடியும் - தேர்தல்கள் ஆணைக்...
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் கீழ் ஊழியர்களின் வைப்பு நிதிகளுக்கு பாதகமான பாதிப்புகள் ஏற்படாது - பதி...