மாகாண எல்லைகளை நிர்ணயிக்க ஐவர் குழு தெரிவு!

Saturday, October 7th, 2017

மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளுக்கான எல்லைகளை வரையறுப்பதற்காக கே.தவலிங்கம் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக்குழுவில் பேராசிரியர் எஸ்.எச்.ஹிஸ்புல்லா, கலாநிதி அனில டயஸ் பண்டாரநாயக்க, முன்னாள் தேர்தல் ஆணையாளர் சிறிவர்த்தன, பேராசிரியர் சங்கர விஜயசந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இந்த ஐந்து பேர் கொண்ட குழுவே மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளை வரையறை செய்யவுள்ளது.மாகாணசபைகளுக்கு கலப்பு முறையில் தேர்தல் நடத்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் தொகுதி வரையறைக்கான குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Related posts:


நாட்டில் ஓகஸ்ட் மாதம்முதல் உக்காத பொலித்தீன் வகைகளை பயன்படுத்த முற்றாகத் தடை - சுற்றாடல் அமைச்சர் மஹ...
எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் - பொது சுகாதார ஆய்வாளர்கள் ...
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்குப் பொருளாதார ரீதியான அசௌகரியங்கள் அதிகரித்தால், ஏழைகள் வீதிக்கு இறங்...