மாகாண எல்லைகளை நிர்ணயிக்க ஐவர் குழு தெரிவு!

மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளுக்கான எல்லைகளை வரையறுப்பதற்காக கே.தவலிங்கம் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக்குழுவில் பேராசிரியர் எஸ்.எச்.ஹிஸ்புல்லா, கலாநிதி அனில டயஸ் பண்டாரநாயக்க, முன்னாள் தேர்தல் ஆணையாளர் சிறிவர்த்தன, பேராசிரியர் சங்கர விஜயசந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இந்த ஐந்து பேர் கொண்ட குழுவே மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளை வரையறை செய்யவுள்ளது.மாகாணசபைகளுக்கு கலப்பு முறையில் தேர்தல் நடத்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் தொகுதி வரையறைக்கான குழு நியமிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கே.கே.எஸ் வீதியினூடான மாணவர் பேருந்துகளுக்கான சேவை நேரம் சீர்செய்யப்படும் - கோண்டாவில் சாலை தெரிவிப்...
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலையீடு - கோழி முட்டையின் விலையில் மாற்றம் - அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்...
இலங்கையில் கெரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,402 ஆக உயர்வு!
|
|