மஹிந்தவை தோற்கடிக்க அமெரிக்கவும் நிதி ஒதுக்கியது!

Saturday, May 6th, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க சர்வதேச ரீதியாக செயற்பட்ட படைகளுடன் பராக் ஒபாமா அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 454 மில்லியன் நிதியை ஒதுக்கியதாக, பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதனை தற்போ​தைய அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் படையொன்று நிர்மாணிக்கப்பட்டதாகவும், அதன் பிரதிபலனாக தற்போதைய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் குறித்து மக்களுக்கு பாரிய எதிர்ப்பு உள்ளதாகவும் சீ.பி. ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ இவ்வாரம் இலங்கை வருகை – அமெரிக்கா வெளியுறவு திணைக்களம் அறிவ...
தொழிற்சங்கங்களுடன் இணக்கமாக செயற்படுமாறு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்து!
அரச வைத்தியசாலைகளில் குவிந்து கிடக்கும் அடையாளம் தெரியாத சடலங்கள் - பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளவத...