சயந்தனுக்கு ஹெல்மட் அடி: சுக்குநூறானது தமிழ் தேசியம்!

Friday, December 15th, 2017

தமிழரசுக் கட்சியினருக்கு இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதம் சாவகச்சேரி நகர சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தெரிவில் மோதல் வரை சென்றுள்ளது.

வேட்பு மனுத்தாக்கல் மதியம் 12 மணிக்கு முடிவடைய இருந்த நிலையில், பெரும் பிரச்சினைகளுக்கு மத்தியில் சினிமாவில் வருவதைப் போன்று, 12 மணி ஆகுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்னால் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

வேட்பாளர் தெரிவில் வடமாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் மற்றும் க.அருந்தவபாலன் ஆகியோருக்கு இடையிலான நீண்ட இழுபறி மற்றும் கருத்து மோதலையடுத்து சாவகச்சேரி நகர சபைக்குத் தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்யுமா இல்லையா என்பது தொடர்பில் கடைசி நிமிடம் வரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகர சபைக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பொறுப்பை சயந்தன் மற்றும் அருந்தவபா¬லன் இருவரிடமும் கட்சி ஒப்படைத்திருந்தது.இதன்படி, தான் தயாரித்த பட்டியலில் உள்ளடக்கப்பட்ட பலர் இறுதி நேரத்தில் நீக்கப்பட்டதை அறிந்து அருந்தவபாலன் கோவப்பட்டதுடன், தனது பட்டியலில் உள்ளடக்கப்பட்டு நீக்கப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.

பட்டியலுக்கான உறுப்பினர் தொகை போதாத நிலையில் அருந்தவபாலனை சமரசம் செய்ய சயந்தன் முயன்றார்.இதன்போது கோபத்தில் இருந்த அருந்தவபாலன் சயந்தன் மீது கையில் வைத்திருந்த தலைக்கவசத்தால் தாக்கினார். இதன்பின் அருந்தவபாலன் தனது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

கட்சியின் தலைமைக்கு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.மேலும், பட்டியலுக்கு ஒருவர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன்போது அங்கு நின்ற சாரதியை பட்டியலில் உள்ளடக்கி மனுத் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவர் வந்துவிட அவரது பெர் சேர்க்கப்பட்டது. வேட்பு மனுத்தாக்கல் மதியம் 12 மணிக்கு முடிவடைய இருந்த நிலையில், 11.55 மணியளவிலேயே இலங்கை தமிழசுக் கட்சி அவசர அவசரமாக வேட்புமனுவைத் தாக்கல் செய்தது

Related posts: