தொடரும் கனமழை – சங்கானை பிரதேச செயலர் பிரிவில் இதுவரை 118 போர் பாதிப்பு – யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல்!

Tuesday, November 9th, 2021

யாழ் மாவட்டத்தில் நேற்று இரவுமுதல் பெய்து வரும் அதிகமான மழைவீழ்ச்சி காரணமாக சங்கானை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 38 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது

சங்கானை பிரதேச செயலகப் பிரிவின் j/179 கிராம சேவகர் பிரிவில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 4 குடும்பத்தினர் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.

யாழ் மாவட்டத்தில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக 200 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ் மாவட்டத்தில் பெய்த அதிக மழைவீழ்ச்சி காரணமாக பாடசாலை இன்று இடம்பெறாது என மாவட்ட செயலாளர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தொடரும் கனமழை காரணமாக யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கடந்த சில மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றர் கனமழை பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் அறிக்கையிட்டுள்ளது.

அதனால் மாவட்டத்தில் பெரும் பகுதி வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுகிறது.

மாகாண ஆளுநருடன் ஆலோசித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related posts: