மருத்துவ கல்விக்கான ஆகக் குறைந்த பெறுபேறுகள் !
Monday, September 25th, 2017
எதிர்வரும் மூன்று வார காலப்பகுதியினுள் மருத்துவ கல்வியினை பெறுவதற்கான ஆகக் குறைந்த பெறுபேறுகள் தொடர்பான இறுதி முடிவு அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்து.
இலங்கை மருத்துவ சபையுடன் ஆலோசனை மேற்கொண்டதன் பின்னர் இது குறித்த அறிக்கை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சகல மருத்துவ பல்கலைகழகங்கள் வழங்கும் மருத்துவ கல்வி மற்றும் பயிற்சிகள் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படும் பெறுபேறுகளைக் கொண்டிருக்க வேண்டும் எனவும், குறித்த இந்த நிபந்தனை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மருத்துவ பாடவிதானங்களை வழங்கும் சகல நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு - சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு தகவல்!
உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரி...
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை வீரர்கள் நீக்கம்!
|
|
|


