மனித உரிமைகள் தொடர்பில் கூடுதல் அக்கறை வேண்டும் – அமைச்சர் திலக் மாரப்பன!
Saturday, August 19th, 2017
மனித உரிமைகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளிலேயே கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியிருப்பதாக புதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று தெரிவித்துள்ளார்.
புதிய வெளிவிவகார அமைச்சராக தனது கடமைகளை நேற்றுப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். “எமது நாட்டுக்கு முதலீடும் சுற்றுலாப் பயணிகளும் அவசியம் என்றால் மனித உரிமைகள் விடயத்தில் நாம் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். எமக்கு அனைத்து நாடுகளுடனும் நட்பான உறவே வேண்டும்.” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
“மிகவும் துரதிஷ்டவசமான சந்தர்ப்பத்திலேயே நான் இப்பதவியை பொறுப்பேற்கிறேன், என்றாலும் என்னால் இயன்ற ஆகக்கூடிய பொறுப்புக்களை நான் நிறைவேற்றுவேன் ” என்றும் அவர் தெரிவித்தார்.
Related posts:
வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்து -இராணுவ தளபதி மகேஸ் சேனாநாயக்க !
பச்சிலைப்பள்ளி பகுதியில் நிலக்கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ள நிலப்பரப்பு விரைவில் கையளிக்க நடவடிக்கை!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்த ஆண்டு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கிரிக்கெட் தொடரை கைவிட்டது...
|
|
|


