போதையூட்டும் பொருள்களுடன் யாழ் போதனாவுக்கு வர முடியாது – நிர்வாகத்தினர் அறிவிப்பு!

Saturday, July 14th, 2018

யாழ் போதனா மருத்துவமனைக்குள் மதுபானம், போதையூட்டும் பொருள்கள் கொண்டுவருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

போதையூட்டும் பொருள்களுடன் வருவோர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவர் என்றும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிலை மென்று வருவோரும் பாக்கு மற்றும் புகையிலை கொண்டு வருவோரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவோரை பார்வையிட வருவோர் கொண்டு வரும் உணவு, உடை முதலான உடைமைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பரிசோதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் 4 ஆயிரத்து 500 க்கும் அதிகமானோர் சிகிச்சை பெறும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையைச் சுத்தமாகப் பேணுவதற்கும் நோயாளர்களின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

Related posts:

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கையில் வரலாறு காணாத சாதனை - மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் இ...
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களையும் மார்ச் 4 ஆம் திகதி வரை வழக்கமறியலில் வைக்க ஊர்...
கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டம் - பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல...