போதைப்பொருளை தடுக்க விசேட நடைமுறை – ஜனாதிபதி பணிப்பு!

Friday, August 25th, 2017

நாட்டில் போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதற்கு பொலிஸாரும் முப்படை புலனாய்வுப் பிரிவுகளும் விசேட நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன  பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக ற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை விடுத்தார்.

சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை மற்றும் நாட்டிற்குள் போதைப்பொருள் கொண்டு வருவதற்கு எதிரான சட்டங்கள் பலமாக இருந்தபோதும், நாட்டின் சில பிரதேசங்களில் போதைப்பொருள் அதிகரித்திருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்று ஜனாதிபதி அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டினார்.

இன்று ஒரு பாரிய சமூக சவாலாக மாறியுள்ள இந்த அழிவில் இருந்து இளைஞர் தலைமுறையை விடுவிப்பதற்கு சமூகத்தின் பொறுப்பு வாய்ந்த அனைத்து தரப்பினரும் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டிற்குள் போதைப்பொருளைக் கொண்டு வருவதைத் தடுப்பதற்கு தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களை மேலும் தீவரமாக நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, இந்த நடவடிக்கைகளில் வெளிநாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொண்டு செயற்படுமாறும் குறிப்பிட்டார்.

Related posts:


சமூகத்தில் அறிகுறிகள் தென்படாத கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் - சுகாதார சேவைகள் பிரதி பணிப்ப...
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் விவரங்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும் - பிரதமர் தினேஷ் ...
நெற்செய்கைக்காக ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு ஏற்பாடு - விவசாய அமைச்சு தெரிவிப்பு!