பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் இறுதிச்சடங்கு இன்று !

Tuesday, July 11th, 2017

பருத்தித்துறையில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறவுள்ளது.

இதன்போது அந்தப் பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னேற்பாடாக வடமராட்சியில் அதிகளவு பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

மணல்காடு பகுதியில் மணல் ஏற்றிச் சென்றதாக கூறப்படும் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.துன்னாலையைச் சேர்ந்த யோகராசா தினேஸ் என்ற 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு கொல்லப்பட்டிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அங்கிருந்து பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியிருந்தனர். இதேவேளை குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்திய பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் சிவராசா சஞ்சீவன், காவலர் மொகமட் முபாரக் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

Related posts: