பெய்ரூட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிவாரணம் – லெபனானுக்கான இலங்கை தூதரகம் அறிவிப்பு!

Saturday, August 8th, 2020

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக தமது அலுவலகம் நாளாந்தம் செயற்படுவதாக அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

குறித்த வெடிப்பு சம்பவத்தில் 10 இலங்கையர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

தற்போது பெருமளவான இலங்கையர்கள் தூதரக அலுவலகத்துடன் தொடர்ச்சியான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் லெபானிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கும் செயற்பாடு தற்போது முழுமையாக இடம்பெற்ற வருவதாக இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தகவல்களை வழங்குவதற்காக லெபானிலுள்ள இலங்கை தூதரகத்தில் 24 மணித்தியாலங்களும் இயங்கும் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கயை 096 157 69 585 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏறபடுத்த முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது,

2 ஆயிரத்து 750 கிலோ கிராம் அமோனியம் நைட்ரேட் இரசாயணம் வைக்கப்பட்டிருந்த லெபனானின் பெய்ரூட்டின் கரையோர களஞ்சியம் ஒன்றில் கடந்த 4 ஆம் திகதி வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது.

அதில் 157 பேர் உயிரிழந்ததோடு, 5 ஆயிரம் பேர் காயமடைந்தனர். அத்துடன் 3 லட்சம் பேர் வரை இருப்பிடத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: