புலிகளைத் தோற்கடிக்க முடியாது என என்னிடம் கூறினார்கள் –  கோத்தா!

Wednesday, October 25th, 2017

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரப் பகிர்வால் முடியாது என முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில் எந்தவொரு நாட்டிலும் அதிகாரப் பகிர்வின் மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதில்லை.ஆனால் சிலர் தற்போது அதிகாரப்பகிர்வுடனான புதிய அரசியலமைப்புக்காக பரப்புரை செய்கின்றனர்.ஒரு காலத்தில் இவர்கள் தான் எந்தச் சூழ்நிலையிலும் போரின் மூலம் வெற்றியைப் பெற முடியாது என்று கூறி வந்தார்கள்.நான் பாதுகாப்புச் செயலாளராக பதவியேற்ற போது அவர்களே எனக்கு போரின் மூலம் வெற்றியைப் பெற முடியாது என ஆலோசனையும் வழங்கினார்கள்.மேலும், விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்று சில நாடுகளும் கூட கூறின.2002ஆம் ஆண்டு பெப்ரவரியில், இலங்கை மற்றும் நோர்வே அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் செய்து கொள்ளப்பட்ட முத்தரப்பு உடன்பாடே இதற்கு காரணமாகும்.பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டுபவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவே மகிந்த அரசாங்கம் முயன்றது.ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. இதனால் வடக்கிலுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு மேலதிக அதிகாரப் பகிர்வோ, அரசியலமைப்பு திருத்தமோ, தீர்வைத் தராது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: