புதிய ஹோட்டல்களுக்கு ஒருலட்சம் பணியாளர்கள் – அமைச்சர் ஜோன் அமரதுங்க!

Sunday, June 17th, 2018

இலங்கை ஹோட்டல்களுக்கு 100 000 புதிய பணியாளர்கள் தேவைப்படும் என்று சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்திருக்கிறார்.

புதிய திட்டங்கள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அடுத்த மூன்றாண்டுகளுக்கு நட்சத்திர தர அறைகளுடன் புதிய பணியாளர்கள் 1இ000இ00 பேருக்கு மேலாக தேவைப்படுவார்கள் என அவர் மேலும் கூறியுள்ளார். அடுத்த இரு வருடங்களில் 2.8 பில்லியன் டொலர் தொகை முதலீடுகள் ஹோட்டல் துறைக்கு மேற்கொள்ளப்படவிருப்பதாக குறிப்பிட்டார்.

இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் 39 ஆவது பட்டமளிப்பு விழாவில் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

இந்நிகழ்வில் 99 பட்டதாரிகள் தமது முகாமைத்துவ டிப்ளோமா பட்டத்தைப் பெற்றுள்ளனர். மேற்பார்வை முகாமைத்துவ மட்டங்களில் புதிய பணியாளர்களை ஆயிரக்கணக்கில் தயார்ப்படுத்த வேண்டிய அழுத்தத்தை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்திற்கு ஏற்படும் என்பதை கூறத்தேவையில்லை. புதிய தொகை பணியாளர்களை தயார்ப்படுத்துவது சவாலாக மேலெழுந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

வருடம் தோறும் விருந்தோம்பல் தொழிற்றுறையில் வெவ்வேறு துறைக்கு 6இ000 க்கும் மேற்பட்டோரை இலங்கை ஹோட்டல் மற்றும் சுற்றுலா முகாமைத்துவ நிறுவனம் தயார்ப்படுத்துகின்றது.

இலங்கையில் துரிதமாக சுற்றுலா தொழிற்துறை வளர்ச்சியடைந்து வருகிறது. இதனால் அடுத்த 3 வருடங்களுக்கு சுமார் 17இ000 நட்சத்திரம் தரம் கொண்ட அறைகள் தேவைப்படும் என்று அமரதுங்க கூறினார். இந்த ஹோட்டலில் பணிபுரிய 1இ00இ000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேவையெனவும் குறிப்பிட்டார்.

 

Related posts: