பிலிப்பைன்சில் விமான விபத்து – இந்திய மாணவர் உள்பட 2 பேர் பலி!

Friday, August 4th, 2023

பிலிப்பைன்ஸ் நாட்டின் இலோகோஸ் வடக்கு மாகாணத்தில் லாவோக் நகரில் ஏற்பட்ட விமான விபத்தில் இந்திய மாணவர் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

லாவோக் நகரத்தில் செஸ்னா 152 எனப்படும் ஒரு சிறிய ரக பயிற்சி விமானத்தில் இந்திய மாணவர் அன்ஷும் ராஜ்குமார் பயிற்சி மேற்கொண்டு இருந்தார்.

அவருடன் விமானத்தின் பயிற்சியாளரும் உடன் இருந்துள்ளார். துகுகேராவ் விமான நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த விமானம், திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

இதையடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதில் விமானம் விபத்துக்கு உள்ளானது தெரியவந்தது விபத்துக்கு உள்ளான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த விமானத்தில் பயணம் செய்த அன்ஷும் ராஜ்குமார் மற்றும் அவருடைய பயிற்சியாளர் இருவருமே பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


தேர்தலுக்கான வேட்பு மனு கோரல் டிசம்பர் மாதம் 11 முதல் 20ஆம் திகதிக்கு இடையில் – தேர்தல் ஆணைக்குழு!
ஜூன் 9 ஆம் திகதி போராட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகையில் ஏற்படுத்தப்பட்ட சேத விபரங்கள் தொடர்பான வி...
ஜூன்முதல் அஸ்வெசும நிவாரணப் பலன்களின் எண்ணிக்கை 24 இலட்சமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்ப்பு - நி...