தேர்தலுக்கான வேட்பு மனு கோரல் டிசம்பர் மாதம் 11 முதல் 20ஆம் திகதிக்கு இடையில் – தேர்தல் ஆணைக்குழு!

Thursday, November 2nd, 2017

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு கோரலை டிசம்பர் மாதம் 11ஆம் திகதிக்கும் முதல் 20ஆம் திகதிக்கும் இடையில் மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த எதிர்ப்பார்த்துள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளுராட்சி தேர்தலை  நடத்த கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா இன்று முற்பகல் கைச்சாத்திட்டார்.

Related posts:

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்றுமுதல் ஆரம்பம் - பரீட்சைகள் தி...
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் காய்கறிகளின் விலை வீழ்ச்சி - வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ச...
பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் இலங்கை 'வலுவான அர்ப்பணிப்பை' காட்டி வருகின்றது - சர்வதே...