பிராந்திய ஒத்துழைப்புடன் நாட்டின் முதலீட்டை மேம்படுத்த முடியும் – மத்திய வங்கியின் ஆளுநர்!
Monday, February 4th, 2019
இலங்கையில் முதலீட்டினை பிராந்திய ஒத்துழைப்புடனான நடவடிக்கைகள் மூலம் மேம்படுத்த முடியும் எனவும் இதன் மூலம் ஸ்திரமான நிதி வசதியினை இலங்கை எதிர் பார்க்க முடியும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
15வது தெற்கு ஆசிய பொருளாதார மாணவர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பிராந்திய ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா முக்கிய பங்கினை வழங்கும் என தெரிவித்த அவர், அண்மைய வருடங்களில் இதற்கு ஏற்ற வகையிலான சாதகமான தன்மையினை இந்தியா கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தெற்காசிய நாடுகள் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்கும் நாடுகளாக செயல்படுகிறது. இருப்பினும், கிழக்கு ஆசிய நாடுகளான ஜப்பான், சீனா, தென் கொரியா போன்ற நாடுகள் பாரிய சவாலை எதிர்நோக்கி போதிலும், தற்போது அந்த நாடுகள் ஸ்திர தன்மையை பெற்றுள்ளன.
தற்போது இந்த மூன்று நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் பில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளன.
இந்த நாடுகளின் செயல்பாட்டை கவனத்தில் கொண்டு இலங்கையும் பொருளாதாரத்தில் அபரிமிதமான முன்னேற்றத்தை காண சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
|
|
|


