பாரதப் பிரதமர் மோடி இலங்கை வருகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள்!

ஐக்கிய நாடுகள் விசாக பூரணை தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6.15 மணிக்கு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இலங்கை வரும் பாரதப் பிரதமர் சமய நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோரையும் சந்திக்கவுள்ளார்.
இன்றையதினம் வருகைதரும் பாரதப் பிரதமருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரவு விருந்துபசாரம் ஒன்றை வழங்கி கௌரவிக்கவுள்ளார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயத்தை முன்னிட்டு விசேட வாகனப் போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
இலங்கை வரும் இந்தியப் பிரதமர் நாளையதினம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச விசாகப் பண்டிகை நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.
Related posts:
அரசியலிருந்து விடைபெறுகின்றாரா பிரதமர்?
திருக்கோவில் மண்டியாவெளிகுளம் அணைக்கட்டு உடைப்பு!
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!
|
|
இன்று இரவு 10 மணிமுதல் 6 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை நாடுமுழுவதும் நடைமுறைக்கு வருகின்றது ஊரடங்கு - ...
மாணவி வித்தியா கொலையாளிகளை பாதுகாத்தது விஜயகலா மகேஸ்வரனே - அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனா...
நாட்டில் அதிகளவான உயிரிழப்புகள் 2022 ஆம் ஆண்டில் பதிவு - தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தி...