பாடசாலை பாடவிதானத்தில் இருந்து வரலாற்றுப் பாடத்தை நீக்குவதற்கு எந்த தீர்மானமும் இல்லை – தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம்!

Wednesday, December 20th, 2017

வரலாற்றுப் பாடத்தை பாடசாலை பாடவிதானத்தில் இருந்து அகற்றுவதற்கு எந்த தீர்மானமும் இல்லை என்று தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி ரி.ஏ.ஆர்.ஜே.குணசேகர தெரிவித்துள்ளார்.

வரலாற்றுப் பாடத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்தி தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் ,இது பொய்யானதும், உணர்வுபூர்வமானதுமான விடயங்களை வெளியிட்டு மக்களை தவறாக வழிநடத்தும் செயலாகும் என்றும் குற்றம் சாட்டினார்.
பாடவிதானங்களை தயாரிப்பது, தேசிய கல்வி நிறுவகத்தின் பொறுப்பாகும். கல்வியாளர்களின் பங்களிப்புடன் தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை பாடவிதானங்கள் மறுசீரமைக்கப்படுவதாகவும் திருமதி குணசேகர மேலும் தெரிவித்தார்.

Related posts: