பளை சம்பவம் தொடர்பில் சொல்லப்படும் கதைகள்?

Sunday, May 21st, 2017

கச்சார் வெளிப் பகுதியில் நேற்று அதிகாலையில் சுற்றுக் காவல் பொலிஸார் மீத நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவரவில்லை என்றாலும் பல ஊடகங்கள் மக்கள் மத்தியில் பேசப்படுகின்றன.

அவை வருமாறு:

இது கிளிநொச்சியில் தனிச் சிங்கக் கொடியை கட்டிய மஹாசேன் பலகாயவின் குழப்பும் முயற்சி, இப்படிச் செய்வதன் மூலம் மீண்டும் வடக்கில் ஆயதப் போர் ஏற்பட்டதாகக் காட்டி தெ;கில் அரசியல் செய்யும் உத்தி

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன், வடக்கு கிழக்கில் ஒரு லட்சத்து 50 அயிரம் படையினர் ஏன் போர் முடிந்த பின்னரும் வைக்கப்பட்டிருக்கின்றனர் என்று கேள்வி எழுப்பினர். அவர்களை வெளியேறுமாறு வலியுறுத்தி மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். அவரத கருத்திற்க எதிர்ப்பை வெளியிடும் வகையில் புலனாய்வாளர்கள் செய்த வேலையாக இது இருக்கும்.

மணல் மற்றும் கஞ்சா கடத்துபவர்களுக்குப் பளை பொலிஸாரின் அண்மைக் கால தீவிர நடவடிக்கைகள் இடைஞ்சலாக இருக்கின்றன. இரவுச் சுற்றுக்காவலை அவர்கள் அதிகரித்ததன் மூலம் கடத்தலைச் செய்ய முடியாதிருப்பதால் பொலிஸாரை அவர்களது நிலையத்திற்குள் முடக்குவதற்காகக் கடத்தல்காரர்களால் செய்யப்பட்டதாக இது இருக்கும்.

வேறு யாரையோ இலக்கு வைத்துப் பதுங்கியிருந்த தாக்குதலாளிகள் இடக்கு முடக்காகக் பொலிஸாரிடம் அகப்பட்டுக் கொண்டதால் தப்பியோடுவதற்காகச் சுட்டு விட்டுச் சென்றிருக்கலாம்.

அவ்வப்போது புலிகள் இயக்கம் மீளுருவாக்கம் பெறுவதாகச் சொல்லப்படும் வழக்கமான கதைகளில் ஒன்றாகயிருக்கலாம்.

போர் முடிந்து 8 வருடங்களாகியும் அரசு ஒரு தீர்வைத் தராமல் இழுத்தடிப்பதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் துக்கியிருக்கலாம்.

இந்த காரணங்களில் எந்த ஒன்றையும் பொலிஸாரோ இராணுவத்தினரோ உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. விசாரணைகளின் பின்னரே காரணத்தை அறிய முடியும் என்றே அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts: