அதிவேக வீதியில் செலுத்தும் வாகனங்களுக்கு விசேட சோதனை!

Thursday, June 28th, 2018

வாகனங்களை அதிவேக நெடுஞ்சாலைகளில் செலுத்துவதற்கு முன்பாக தீவிர சோதனைகளுக்கு உற்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் கோளாறுகளைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்காக அதிவேக வீதி நுழைவாயிலில் பொலிஸ் அதிகாரிகளை நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வாகன மற்றும் வீதி பாதுகாப்பிற்கான பணிப்பாளர் பொலிஸ் அதிகாரி இன்ந்திக்க ஹப்புகொட கூறியுள்ளார்.

வாகனங்களின் உட்பாகங்கள் தொடர்பில் தீவிர சோதனை நடத்தப்பட்டதன் பின்னரே வாகனங்களுக்கு அதிவேக வீதிக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதிவேக வீதியில் பயணிக்கும் போது வாகனங்களில் ஏற்படும் கோளாறு தொடர்பில் 1969 என்ற இலக்கத்திற்கு அறியத்தருமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Related posts:

சமையல் எரிவாயுவுக்கு காத்திருக்கும் மக்கள் குறித்து செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் போர்ட் சிட்டியை பா...
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - எதிர்காலத்தில் மருந்துகளுக்கு தட்டு...
தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டு ஒன்றிணையுங்கள் - அனைத்து அரசியல் கட்ச...