உலகின் பிரபலமான தலைவர் தரவரிசையில் முதலிடத்தில் இந்திய பிரதமர் மோடி!

Monday, February 6th, 2023

பிரபலமான உலகத் தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.

அமெரிக்காவை சேர்ந்த கன்சல்டிங் நிறுவனமான மோர்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வில் 78 சதவிகித பேரின் ஒப்புதலுடன் உலகின் மிக பிரபலமான தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் ஜனாதிபதி  இமானுவல் மக்ரோன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், உள்ளிட்ட 22 உலக தலைவர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில், அவர்களை பின்னுக்கு தள்ளி, அதிக புள்ளிகளை பெற்றிருக்கிறார் மோடி.

இந்த குளோபல் லீடர் ஒப்புதல் பட்டியலுக்கான தரவுகள் கடந்த ஜனவரி 26 முதல் 31 ஆம் திகதி வரை சேகரிக்கப்பட்டது என்று அரசியல் புலனாய்வு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது ஒவ்வொரு நாட்டிலும் வயது வந்த குடியிருப்பாளர்களின் கருத்துகளை ஒருங்கிணைத்து எடுக்கப்பட்டது. மாதிரி அளவுகள் நாடு வாரியாக வேறுபட்டன.

இந்த ஆய்வில், 78 சதவிகித ஒப்புதல் இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இது அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடனுக்கு கிடத்த ஒப்புதல்களை வித அதிகம். ஜோ பைடனுக்கு 40 சதவிகித வாக்குகள் கிடைத்தன, இவர் ஏழாவது இடத்தில் இருக்கிறார்.

மோடிக்கு அடுத்தபடியாக மெக்சிகோவின் ஜனாதிபதி ஆன்ட்ரே மேனுவெல் லோபஸ், 68 சதவிகித வாக்குகளுடன் இரண்டாவது பிரபலமான உலகத் தலைவராக இருக்கிறார். மூன்றாவது இடத்தில் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி  அலையன் பெர்செட் இருக்கிறார்.

ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கிய போது, “இது போருக்கான நேரமல்ல” ரஷ்ய ஜனாதிபதி  புதினிடம் இவர் தெரிவித்தது, உலகளவில் மக்கள், தலைவர்கள் காதுகளில் உரக்க ஒலித்தது, போரை நிறுத்த முயற்சிக்கும் அமெரிக்காவுடன் கைக்கோர்த்தது போன்ற விஷயங்கள் மோடிக்கு அதிக வாக்குகள் கிடைக்க காரணமாக இருக்கிறமை குறிப்பிடத்தக்கது

Related posts: