பரீட்சை மோசடிகளுக்கு இனிக் கடும் நடவடிக்கை – அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்!
Thursday, December 21st, 2017
பரீட்சை மோசடிகள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பரீட்சை முறைகேடுகளில் ஈடுபடுவோரை கடுமையாகத் தண்டிக்குமாறு கல்வி அமைச்சர் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் பொலிஸ் திணைக்களத்திற்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
பரீட்சைச் சட்ட திட்டங்களை முறையாக அமுல்படுத்துவதன் மூலம் பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு நியாயத்தை வழங்கமுடியும் எனவும் இதன் காரணமாகவே இவ்வாறு அமைச்சர் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் காலங்களில் பரீட்சை மோசடிகள் முறை கேடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு பரீட்சை சட்டத்திற்கு மேலதிகமாக குற்ற விசாரணைப் பிரிவின் ஊடாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது
Related posts:
சிறைச்சாலைகளிலிருந்து முன்னெடுக்கப்படும் குற்றச் செயல்கள் தடுக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி கோட்டபய ராஜ...
நாளை 3 மணி நெர மின்வெட்டு - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல்!
பால்மா விவகாரம் - அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பணிப்பு!
|
|
|


