பரசிட்டமோல் மாத்திரை இரண்டு வயது சிறுமியின் உயிரை பறிந்த பரிதாபம்!

Saturday, April 21st, 2018

பரசிட்டமோல் மாத்திரை தொண்டையில் சிக்கி, இரண்டு வயதான சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குருணாகல், வெல்லாவ ஹெங்கவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புத்தாண்டின் பின்னர் சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சலுக்கு தனியார் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் கால்வாசி பகுதியை சிறுமிக்கு வழங்குமாறு மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த ஆலோசனைக்கு அமைய பெற்றோர் பரசிட்டமோல் மாத்திரையை உடைத்து சிறுமிக்கு வழங்கிய போது அது தொண்டையில் சிக்கி, சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Related posts:


பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி : மூன்று கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம் - பரீட்சைகள் திணைக்க...
சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற மாவட்டங்களிற்கு செல்லும் கர்ப்பிணி தாய்மாருக்கு எரிபொருள் வழங...
வட கொரியாவுக்கு விஜயம் செய்யுமாறு அதிபர் கிம் ஜோங் உன் அழைப்பு - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நன்ற...