‘காட்போட்’ பெட்டிக்குள் வாக்கு – மோசடிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சம்!

Monday, August 3rd, 2020

நாளைமறுதினம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக ‘காட்போட்’ மட்டையிலான வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மோசடிகள் நடைபெறும் வாய்ப்பு அதிகம் ஏற்படலாம் என அக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரையான காலத்தில் இடம்பெற்ற தேர்தல்களில் மரப்பலகையினாலான வாக்குபெட்டிகளே அதிகளவாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இம்முறை ‘காட்போட்’ மட்டையிலான வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளது.

கனதியான கார்ப்போர்ட் மட்டைகளைக் கொண்ட வாக்குப்பெட்டிகள் கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களால் தயார் செய்யப்பட்டது. இவ்வாறு தயார் செய்யப்பட்ட பெட்டிகள் நாடளாவிய ரீதியில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முன்பதாக பல மாவட்டங்களில் உயர் அரச அதிகாரிகள் பலர் ஒரு சிலருக்கு பக்கச் சார்பாக செயற்படகின்றனர் என தேர்தல் கண்காணிப்பச் சபை தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே குறித்த வாக்கு பெட்டி தொடர்பில் மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: