பயணிகள் போக்குவரத்துக்கு இனி மின்சார பஸ்கள்!
Sunday, January 14th, 2018
18 மின்சார பஸ்களை கொழும்பு நகரின் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை 50 மின்சார பஸ் வண்டிகளை கொள்வனவு செய்வதற்காக திறைசேரியிடமிருந்து 50 கோடி ரூபாவை பெற்றுள்ளது. முதற்கட்டமாக 18 பஸ்களைகொள்வனவு செய்யவிருப்பதாக அதன் தலைவர் ரமல் சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும் மின்சார பஸ் வண்டிகளை கொள்வனவு செய்வதற்கான கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
முகக்கவசமின்றி பொதுவெளியில் நடமாடினால் 6 மாத சிறைத்தண்டனை - சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹ...
கொடியேற்றத்துடன ஆரம்பமானது நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெரும் திருவிழா!!
சீனாவின் ஆக்ரமிப்பைத் தடுக்க, இரும்பு கவசம் - ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் என அமெரிக்க...
|
|
|


